புலம்பல்




பி. அமல்ராஜ் - மன்னார்

Home

The PMC is ready to bare any kind of caseloads in terms of providing services to the target or proposed group. The company itself has more products based on its expertise and ready to adopt any new concepts or products based on the requirements of the customer or client. All the new requirements of our clients will be treated as a new opportunity to the company to prove our effectiveness based on the company mandates.

Basic Training modules we offer:

1. Leadership training.

2. Leadership & Team Building

3. First Aid Training

4. PCM (Project Cycle Management) – for NGOs

5. Assessment Training – for all kind of projects

6. M&E (Monitoring & Evaluation)

7. PRA & PNA training

8. CBO Strengthening Programme

9. Reporting & Proposal Writing

10. People Management Skill Training

11. Free Stress Management Training

12. Staff Motivation Programme

13. ToT (Training of Trainers) Programme

14. Personality Development Programme

15. Gender and Human Relationship Programme

16. Legal Aid Consultancies

17. Drama & Theatre Workshop

18. Logistics Management

19. Hygiene Promotion Programme

20. Effective Presentation Skill Training

21. Natural Disaster Awareness Programme

22. Micro Business Development Programme

23. Business Management Training (ILO-SIYB training)

24. Corporate People Skill Training

25. Community Mobilization

26. Conflict Mitigation Techniques

27. GBV - Gender -based Violence

28. Basic Technology in Construction

29. Building Maintanence

30. Basic Quality in Construction

31. Community Based Construction

32. Repair and Renovation in Construction

.

Click here to check out our on going projects of our existing clients.

Our team is available at your convenience to discuss how the above topics can be tailored and customized for your organization. Contact us to learn why organizations have chosen PMC for their Leadership Training and Development initiatives.

view:  full / summary

மனதை திருடிய வெண்பனியே..

Posted on June 10, 2011 at 8:50 AM Comments comments (0)

      

திரும்ப திரும்ப கேக்கணும் போல இருக்குங்க. கேட்டுகிட்டே இருக்கலாம் போல இருக்குங்க.

          

அண்மையில் வெளிவந்த கோ படத்தில் இடம் பெற்றிருக்கின்ற பாடல்களில் என்னை ரசனையின் உச்சக்கட்டத்தை உரசிப் பார்க்க வைத்த பாடல் அது.

         

வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா

இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா

        

பாடல் வரிகளும், பாடல் இசையும், பாடல் குரல்களும், காட்ச்சியமைப்பும், நடனமும் சரியாய் அமைந்த பாடல்கள் எப்பொழுது வந்தாலும் அதை மக்கள் நிச்சயமாக வெற்றிபெற செய்வார்கள். காரணம் இவை ஐந்தும் சரியாய் பொருந்துகிறபொழுது அந்த பாடல் பூரணம் அடைகிறது. அது மக்கள் மத்தியில் நிரந்தரமாகவே சென்று அமர்ந்துவிடுகிறது. அந்தவகையில் இந்த பாடலும் ஒரு பூரண ரசனையை கொட்டித் தள்ளியிருக்கிற ஒரு பாடல்.

     

ஹரிஸ் ஜெயராஜ் இன் இசை வழமை போலவே தூக்கல். இருந்தும் கொங்கோ நாட்டின் "mercy mercy" என்கின்ற பிரெஞ்சு பாடல் மெட்டின்  ஒரு சாயல் இருந்தாலும் மனதளவில் ஒரு முழுமையான ரசனைகொண்ட பாடலாக ஒட்டிக்கொள்கிறது.

        

கடந்த காலங்களில் ஹரிஸ் சில உலக பிற மொழி பாடல்களின் மெட்டுக்களை திருடி தமிழில் கொண்டுவருகிறார் என்ற சர்ச்சை நிலவியிருந்தாலும் இசையின் அவரின் தனித்துவம் இப்படிப்பட்ட பாடல்களில் தெளிவாகவே தெரிகிறது.

       

பாடிய குரல்களை பற்றி சொல்லவே வேணாம்..பாம்பை ஜெயஸ்ரீ மற்றும் ஸ்ரீராம் பார்த்தசாரதி. சினிமாவின் சிலேடை சில்மிசக்குரல்கள் இவை இரண்டும். ஹரிசின் குரல் தெரிவு பிரமாதமாகவே இருக்கிறது.

           

வரிகள். வித்தகக் கவிஞன் பா.விஜய். கவிதை மனசுக்குள்ளே ஊடறுத்துப் பாய்கிறது.

      

இமைகளில் வளைந்தும் இரு விழு நுழைந்தும்

இறங்கினாய் மனதுள்ளே

முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்

என்னக்குள்ளே எனக்குள்ளே ...

        

பிரமிக்க வைக்கிறது. இதிலே மிக முக்கியமான விடயம் இசையோடு இனிய வரிகள் இசைந்துகொடுத்து போகிறது. இதை கொஞ்சம் பாருங்கள்,

     

எவ்வனம் அதிலொரு சூழ்வனம்

சோலைதம்  அதில் அலைந்திட வா தினம்

கனம் கனமே..

   

ஒருமுறை கேளுங்க. வெண்பனியில் உறைந்து போவீர்கள். ஒட்டுமொத்தத்தில் இந்த பாடல் என்னை உரசிப்போனதட்கு முதல் காரணம் இசை, இரண்டு வரிகள், மூன்று மயக்கும் குரல்கள்.

       

பாடலை பார்க்க கேட்க:

http://www.youtube.com/watch?v=A8qOk7hXIzE&NR=1

   

ஒரு அபலையின் டைரி - பாகம் 02

Posted on June 10, 2011 at 7:09 AM Comments comments (4)

          

ராஜன் அண்ணே, ராஜன் அண்ணே எண்டு ரெண்டு பேரு இல்லேங்க ஒராள்தான், அவர எனக்கு கொஞ்சநாளா தெரியுமுங்க. எப்பிடி எண்டு கேக்கிறது புரியுது. சொல்றன். அவர் ஒரு ஆட்டோ ஒட்டுறவருங்க. நான் பள்ளிக்கூடம் போற வளிலதான் நிப்பாரு.

       

அப்ப நான் உயர்தரம் படிச்சுக்கொண்டிருந்தன் எண்டு நினைக்கிறன். போறப்ப வாரப்ப நானும் ஒரு வஞ்சகம் இல்லாம சிரிப்பேனுங்க அவரும் ஒரு மார்க்கமா சிரிப்பாருங்க. என்னங்க ஒரு சிரிப்புக்குப் போய் கஞ்சல் பட ஏலுமாங்க. போயிட்டு போகட்டும் எண்ணு சிரிச்சிடுவன்.

        

ஒரு நாள் பயங்கர மழை. அதுவும் பள்ளிக்கூடம் விட்டு வரேக்க. எண்ட குடைய எடுத்து விரிச்சன். மழைக்கு குடை விரிச்சும் நனைஞ்சுகொண்டே போற ஜாதிதானேங்க வறுமை ஜாதி. எண்ட குடைய இந்த கறையானுங்க எப்பிடி வளைச்சு வளைச்சு சாப்பிட்டிருக்காங்க தெரியுமா?. மத்தவன் சொத்தில ஆட்டைய போடுற பழக்கம் மனிதர்களுக்கு மட்டுமில்லேங்க இந்த கறையானுகளுக்கும் இருக்குங்க. என்னில பாதி நனைஞ்சும் பாதி நனையாமலும் குடைக்கு வெளிலையும் மழை எண்ட குடைக்குள்ளையும் மழை. என்ன பண்றது. எங்கட கஷ்டம் ஊருக்கே தெரியும் இந்த மழைக்கு தெரிஞ்சா என்னங்க.

           

அதே இடத்தில வழமைபோலவே அந்த ராஜன் அண்ணா நிண்டாரு. மழை அதிகமா இருந்த படியால எனக்கு உதவிறதாய் என்ன அவர்ட ஆட்டோக்குள்ள கூப்பிட்டாருங்க. நானும் மழைதானே எண்ணு போயிட்டன். மழைக்கு ஒதுங்கிறதுக்கு மனை என்னங்க பனை என்னங்க. இரண்டு பக்கமும் கறுப்பு துணியால மூடப்பட்டிருக்கும் ஆட்டோ. முன்னைய சீட்டில திரும்பியபடி அவர் பின்னைய சீட்டில நடுங்கியபடி நான்.

            

அவருடைய ஆரம்பம் எல்லாம் நன்றாகதானுங்க இருந்திச்சு. போக போக நாக்கு களைப்படைய வார்த்தைகள் இறட ஆரம்பிச்சிரிச்சு. 'நான் ரொம்ப அழகாம்.' யாரு கேட்டா? 'தன்ட மனுசியவிட என்னை தனக்கு பிடிக்குமாம்'. அடப்பாவி.. உன்ன நம்பி வந்த அவள செருப்பால அடிக்கணும். 'எண்ட உடம்பெல்லாம் மழையில நனைஞ்சு ரொம்ப ஈரமா இருக்காம்'. ஏனுங்க இதைதான் ஆடு நனையுது எண்டு ஓநாய் அழுவுது எண்டு சொல்றதா?.. 'எண்ட பிகரு ரொம்ப அழகாம்..' நான் எறும்ப மாரி இருக்கன் அவன் எரும மாரி இருக்கான், எண்ட பிகர அவன் வரிணிக்கிறான் பாருங்க. இதைக்காட்டிலும் அவர்ட வார்த்தைகள் அந்த டபிள் மீனிங் எண்டு சொல்லுவாங்களே அப்பிடி போக தொடங்கிடிச்சுங்க.

          

அப்பிடி கதைச்சுக் கொண்டு இருக்கும்போதே திடிரெண்டு கைய பிடிச்சிட்டாரு பாருங்க. அண்டைக்குதானுங்க எண்ட துலங்கல்கள் எல்லாம் அவ்வளவு வேகமா செயற்பட பார்த்தன். அவனது கன்னம் சிகந்து முகத்தை தொங்கவிடும் போதுதான் அம்மா சொல்லித்தந்த ஒன்று ஞாபகத்துக்கு வந்தது. "வயசுக்கு மூத்த யாருக்கும் கை நீட்டக்கூடாது". என்ன பண்றது. ஒரு பொண்ணுக்கு ஒழுக்கத்த விட அவ கற்பு முக்கியம்தானேங்க.

        

வீட்ட வந்து அம்மாட்ட சொன்னபோது அம்மா சிரித்தாங்க. எனக்கு வந்துதுபாருங்க ஒரு கோவம். அதுக்கு அம்மா சொன்னா, "எண்ட பெட்ட குட்டிகள் எண்டாலும் சிங்கக் குட்டிகள்.." அன்னைக்கு மனசுக்குள்ள ஒன்னு பதிஞ்சுதுங்க, அம்மா என்மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கா எண்டு. இப்படி அந்த காலத்த என்னால மறக்க ஏலாதுங்க. சகோதரிகள் நாங்க எல்லாரும் வேகமா வளருறம் எண்டு எங்கட அம்மா அடிக்கடி சொல்லுவா.

       

சகோதரங்கள் எண்டு சொல்லேக்க எங்கட சின்னக்கா ஒருக்கா ரோட்டில ஒருத்தனோட சண்டைபோட்டதுதான் ஞாபகத்துக்கு வருது. சின்னக்காவும் நானும் கிட்டத்தட்ட ஒரே அளவுங்க அப்ப. அது எங்களுக்கு மிக மிக உதவியா இருந்திச்சு. ஏன் தெரியுமாங்க. ஒரே சட்டைய மாறி மாறி ரெண்டு பெரும் போட்டுக்கலாம். செலவு குறைவு. ஒரே செருப்ப மாதி மாதி போட்டுக்கலாம். இந்த உள்வீட்டு விவகாரம் ரோட்டில நிக்கிற ஒருத்தனுக்கு எப்பிடியோ தெரிஞ்சிட்டுங்க. நாங்க என்ன ஆசையிலையா அப்பிடி மாதி மாதி போட்டுக்கிரம்? ஒருநாள் நாங்க எல்லாரும் கோயிலுக்கு போகேக்க மூணு பொடியள் ரோடு ஓரம் நின்னுக்கிட்டு நாங்க அவங்கள நெருங்க ஒண்ணு சொன்னாங்க பாருங்க. " மச்சான் எண்ட டி சேட்டும் பிரீயாதான் இருக்கு மாதி மாதி போட்டு கொள்ளுவமா??"

       

பாருங்க நாங்க படுற கஷ்டம் இந்த பொடியளுக்கு பகிடியா கிடக்கு. அத கேட்ட சின்னக்கா அவங்களோட தர்க்கமிட நாங்க எல்லாம் அவர்களுக்கு மன்னிப்பு கூறி அவளை வீட்டிற்கு அழைத்துவந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. கஷ்டத்தின் சில அனுபவங்களை சொல்லும் போது உங்களால் விளங்கிக்கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கும். அனுபவித்தால்தான் அது தெரியுமுங்க.

           

இப்படியெல்லாம் கடந்த எங்கள் காலங்கள் முதல் முறையாக ஒரு முதல் அனுபவத்திற்கு எங்கள கூட்டிச்சென்றதுங்க. எங்கட மூத்த அக்காக்கு அந்த வருடம் முப்பத்து மூன்று வயசு ஆரம்பிச்சதுங்க. அண்ணையில இருந்து எங்கட அக்காக்கு எங்கட ஊர்ல ரெண்டு பெயருங்க. ஒண்ணு கனவுக்கன்னி (ஆண்கள் மத்தியில) ரெண்டாவது முதிர்கன்னி. அவளுக்கு அப்பவே உணர்வுகள் எல்லாம் செத்துவிட்டதாய் தான் சொல்லுவாங்க. பாவம். அவட நண்பிகள் எல்லாம் திருமணமாகி குழந்தை குட்டிகளோட இருக்கேக்க இவள் மட்டும் அதே நான்கு சுவர்களுக்குள்ள ஒட்டறை போல. அன்றாடம் சாப்பாட்டுக்கே சிங்கி அடிக்கிற எங்களுக்கு சீதனம் கொடுத்து கலியாணம் செய்யவாங்க முடியும். வீட்டு மானத்தையே அப்ப எல்லாம் காப்பாத்துறது சின்னக்காட ஒத்தை வருமானம்தானுங்க. அமா. அவ ஒரு நிறுவனத்தில வேலைக்கு போனவ.

             

எங்கட பெரியக்காவப் பத்தி நான் ஜோசிக்கும் போதெல்லாம் எண்ட ஞாபகத்தில டக்கெண்டு வந்துபோறது எங்கட ஊரில இருந்த கனகசபாபதி மாமாதானுங்க. காரணமும் இருக்கு. எங்கட பெரிய அக்காவ பாத்து இவர் ஒண்ணு சொன்னது எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு. "வசதியும் இல்ல வயசும் போயிட்டு, இனியும் கரை சேருறது எண்டால் கஷ்டம்தான்..." இந்த மனுஷன் ஊருக்குள்ள ஒரு பெரிய ஆளுங்க. கதைகள பாத்திங்களா. எப்பிடிங்க இப்பிடி மற்றவங்கட மனச புரிஞ்சு கொள்ளாம நோகடிக்கிறாங்க. இதை இன்னைக்கு வரைக்கும் நான் பெரிய அக்காட சொன்னதில்லேங்க. சொன்னா எவ்வளவு கஷ்டப்படுவா தெரியும் தானேங்க? ஏன் இந்த மனுசர் எல்லாம் பெண்கள இப்படி துன்புறுத்துறாங்க. நம்மட சமூகம் ஏனோ பெண்களை கூர்ந்து கவனிப்பதில் இத்தனை அதிகம் ஆர்வம் கொண்டிருக்குங்க.

          

நிறைய பேர் வந்தாங்க. வசதிய கேட்டிடு போய்டாங்க. இன்னும் சில பேர் வந்தாங்க அக்காவ பாத்தாங்க கூடவே ரெண்டு தங்கசிகளையும் பாத்தாங்க, அப்பா வேற இல்ல, போய்டாங்க. இன்னும் சிலர் வந்தாங்க வயச கேட்டாங்க, கூட எண்டு போய்டாங்க. இப்படியே அக்கா வெறும் காட்சிப் பொருளாக இருந்தாவே தவிர விலை போகலைங்க. கஷ்டத்துக்கு முன்னுக்கு நிர்வாணமா நிண்ட அவட உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமா சாக தொடங்கிச்சு. அப்பதானுங்க கடவுளுக்கும் இவ மேல ஒரு இரக்கம் வந்திச்சு.

         

ஒருநாள் நாங்க கோவிலுக்கு போய் இருந்தப்ப எங்கள ஒரு ஆம்பிள நீண்ட நேரமா பார்த்துக்கொண்டு இருந்தாருங்க. ஒரு வாரம் கழித்து அவர் வீட்டுக்கு வந்து அம்மாட்ட பேசினாருங்க. தனக்கு அக்காவ பிடிச்சிருப்பதாகவும் அவவ திருமண செய்துகொள்ள விரும்பிறதாவும். அவர் எதிர்பார்ப்பு எல்லாம் அக்கா மட்டும்தான் என்பதை தெளிவாக புரிஞ்சுகொண்டபிறகுதானுங்க அம்மாக்கு பேச்சே வந்தது. இந்த மாப்பிள்ளையும் செம்பு (அதுதான் சீதனமுங்க) கேட்டா நாங்க எங்க போறது? அம்மாட வார்த்தை இல்லாத சந்தேகத்துக்கு அவர் சிம்பிளா ஒரு பதில் சொன்னாருங்க. "எனக்கு தேவை உங்கட மகள் மட்டும்தான். அவள கண் கலங்காம வச்சிருக்க என்னட்ட வசதி இருக்கு, மனசிலயும் இருக்கு கையிலயும் இருக்கு. நம்பினால் குடுங்கள் நம்பாவிட்டாலும் குடுங்கள் நம்ப வைத்துவிடுறன்.." அவர்ட டீலிங் அம்மாக்கு ரொம்ப பிடிச்சிருந்திசுங்க. எல்லாத்தையும் நேரையா, தெளிவா, விவேகமா பேசிற தன்மை அம்மாவையும் சம்மதிக்க வச்சு அக்காவையும் காதலுக்குள் நகர்திடிச்சு.

            

இப்படிப்பட்ட ஆண்கள் ஊருக்குள்ள மிகக் குறைவுங்க. பிறகென்ன அவட திசை ஒருவாறு வெளிக்க ஆரம்பிச்சது. அவட முகத்தில மின்மினிகள் கூடியிருந்து கும்மியடித்தன. அந்த வீட்டாக்களும் நாங்களும் கதைச்சு பேசி கலியாணத்த ஒருவாறு நல்லபடியா நடத்தி முடிச்சமுங்க. எங்கட கஷ்டத்த சரியாய் புரிஞ்சுகொண்ட அவங்க எல்லா செலவையும் அவங்களே ஏத்துக்கிட்டாங்க. அதுக்காக நாங்க அப்படியே விட ஏலாது தானேங்க. அம்மா வழமைபோலவே குமார் மாமாட்ட வட்டிக்கு கொஞ்சம் காசு வாங்கி எங்களுக்கு புது சட்டை மற்றும் கலியாணத்துக்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடிச்சாங்க.

          

அன்று அக்காட கலியாண நாள், மேடையில கனவுகளோட அக்கா, வட்டி குமாரை ஜோசித்தவாறே அம்மா, நீண்ட நாட்களுக்கு பிறகு கழுத்திலும் கைகளிலும் இமிடேஷன் நகை அணிந்த சந்தோசத்தில் நான்...

       

தொடரும்............

  

ஒரு அபலையின் டைரி - பாகம் 01 ய் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்:     http://rajamal.webs.com/apps/blog/show/7249448-2962-2992-3009-2949-2986-2994-3016-2991-3007-2985-3021-2975-3016-2992-3007-2986-3006-2965-2990-3021-01

      

 

 

சோதனை(சாவடி)!!

Posted on June 9, 2011 at 5:49 AM Comments comments (2)

       

என்னிடத்தில்

என்ன இருக்கிறது

என்பதில்

என்னைவிட

அவர்களுக்குத்தான்

அக்கறை அதிகம்.

         

இதுவரை

பைகளை மட்டும் பார்த்தவர்கள்

இப்பொழுது - என்

தொப்பையையும் சந்தேகிக்கிறார்கள்..

          

பெண்களின் சோதனையில்

தப்பியது

அவர்கள் கருப்பை மாத்திரமே..

             

அவர்கள்

தடவி தடவியே

மரத்துப் போயின - எங்கள்

தேகம்.

        

எங்கள்

இடுப்பு சரையும்

மடிப்பு வரையும்

சகலதும் தெரியும்

அவர்களுக்கு..

     

எங்கள்

சட்டைகளில் பலவும் - தோள்

பட்டைகளின் அளவும்

பாரபட்சமின்றி தெரியும்

அவர்களுக்கு..

            

அவர்கள் தடவுவதற்காகவே

நாங்கள் - நித்தம்

யாத்திரை செய்கிறோம்

எங்கள் மானம்விக்கும்

வீதிகளில்.

 

இவர்கள் - தமிழர்களை

தட்டிக்கொடுக்கிறார்களாம்

சாவடிகளில் - தாராளமாய்

தடவியும் கொடுக்கிறார்கள்.

        

 

நினைவு வெளியெங்கும் உன் ஞாபகங்கள்

Posted on June 6, 2011 at 1:41 AM Comments comments (4)

நீ

உதிர்ந்தபோது,

மலராத பூக்கள் கூட

பகிஷ்கரிப்பு செய்ததே..

     

பொழுது சிரிக்க

பூமி வெளிக்க

சூரியன் கூட

சந்திரனை முந்திக் கொண்டுவர

நீ மட்டும் - நான் இட்ட

திருநீறாய் மறைந்தாய்...

            

நீ

என்னை வளைத்தாய்

நிலா

தானாய் வளைந்தது.

நான் உன்னை

வெறுக்கும் போதெல்லாம்

ஏனோ - அந்த சூரியன்

நெருப்பாய் சுட்டது..

இத்தனைக்குள்ளும் - என்

நினைவு வெளியெங்கும்

உன் ஞாபகங்கள்

மானம் விட்டு திரிந்தது..

          

கூடவே இருந்தாய்

குதூகல வெள்ளம் - நான்

கும்பிட்டும் பிரிந்தாய் - தினம்

ஞாபகங்கள் கொல்லும்.

      

வந்துபோகும் ஞாபகங்கள்

விடிந்தால் கூட

முடிந்து போவதில்லை.

என்

பொழுதுகளும்

விழுதுகளும்

கெஞ்சினாலும் - அவை

மரணிப்பதில்லை.

        

என் பக்கம்

நீ வந்தாய்

என்

தேகம் சிலிர்த்தது

வானம் சிரித்தது

இரவில் வந்த

தூக்கம் கூட

கவிதை சொன்னது..

       

தந்த மனதை

திருப்பி கேட்டவள்

தன்

ஞாபகங்களை மட்டும்

தானம் செய்து போனதன்

தர்மம் புரியவில்லை...

      

நல்லவளே,

நீ வேண்டும் என்று

என்

இரவுகளை விற்றேன்..

அதன் இலாபமோ என்னவோ

உன்

ஞாபகங்கள் மட்டும்

தாராளமாய் கிடக்கிறது

என்னிடம்.

        

என்

நினைவு வெளியில்

உன் ஞாபகங்கள்..

செத்துப்போன - என்

உணர்வுகளில்

அவற்றின்

சின்ன சின்ன சில்மிசங்கள்.

உன்

ஞாபகங்களோடு

வாழ்கிறவன் நான்.

மறந்துவிடாதே

அவை சாகும் வரை

நீயும் மரணிப்பதில்லை

என்னுள்.

          

ஒரு அபலையின் டைரி - பாகம் 01

Posted on June 1, 2011 at 7:33 AM Comments comments (5)

           

வணக்கமுங்க. என்னை தெரிகிறதா என்று கேட்பதற்கு நான் ஒன்றும் பட்டத்து ராணியல்ல. வீட்டின் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண ரமணி. நானும் எண்ட கதைகளும் முழுக்க முழுக்க கற்பனை எண்டாலும் இந்த சமூகத்தில நடக்கிற சீர்கேடுகள ஓரளவேனும் சொல்லகூடிய கதாபாத்திரம். அதுக்காக என்னப்போல பெண்கள் இந்த நாட்டில அதுவும் நம்மட தமிழ் பிரதேசங்களில இல்லை எண்டு சொல்ல வரலேங்க. நிச்சயமா இருப்பாங்க. ஒண்ணு தெரியுமா உங்களுக்கு, குடும்பத்திலையே மிக சந்தோசமா இருக்கிறது பெண்கள் தான் எண்டு நீங்க எல்லாம் நெனைச்சுக்கொண்டு இருகிறீங்க. ஒருவகையில ஆமாங்க. நாங்க எல்லாம் குளத்தில இருக்கிற அழகான தாமரைய போன்றவங்க. குளத்துக்குள்ள என்னதான் பிரச்சனைகள் துன்பங்கள் வந்தாலும் அது வெளில தெரியாம நாங்கள் அழகிய அந்த தாமரை இல்லைகள் போல எங்கட முகத்த சந்தோசமா அழகா வச்சுக்கிண்டு எல்லாத்தையும் மறைச்சிடுவோமுங்க. எங்களுக்குள்ளயும் நிறைய வேதனைகள் வலிகள் இருக்குங்க. அதுகள என்னால முடிஞ்ச அளவு சொல்லுறதுதான் இந்த தொடர் பதிவின்ட நோக்கம்.

         

ஐந்து வயசில ஆடம்பரமா வாழ்ந்த வாழ்கையிண்ட பதிவுகள் இன்னும் எண்ட மனச் சுவர்ல அப்பிடியே ஆணி அறைந்சாப் போல இருக்குங்க. அம்மாக்கு ஐந்தும் பொம்பிள பிள்ளைங்க. அப்பாக்கு ஐந்து நேரம் மாத்திரைங்க. ஏதோ அது இது எண்டு, எக்கச்சக்க வருத்தமுங்க அவருக்கு பாவம். ரொம்ப வேதனைபட்டு வருத்தம் என்றதுக்கும் அப்பால எங்கட எதிர்காலத்த யோசிச்சு யோசிச்சே நேரத்துக்கு எங்கள விட்டு போய்ட்டாருங்க. அதால அம்மதானுங்க அப்பாட பாரத்தையும் சேத்து சுமந்து சுமந்து நாங்க வளர வளர அவ தேஞ்சு தேஞ்சு போய்டாங்க. அவக்கு நாங்க கஷ்டப்பட்ட காலத்தில இருந்தே உதவி செய்தவங்க ரெண்டு பெருதானுங்க. ஒண்ணு நம்பிக்கை, ரெண்டு மன உறுதி. எங்கள படிக்க வைக்க அவ துடிச்ச போதெல்லாம் கஷ்டம் பல்லு இழிச்சுதுங்க. நீங்க எல்லாம் போர்வையால போத்துகுவிங்க நாங்க எல்லாம் மற்றவங்கட கேலி பார்வையாலதான் போத்திக்கிட்டம். என்ன பண்றது ஒரு படத்தில அந்த விஜய் பயல் சொல்லுறதபோல வாழ்க்கை ஒரு வட்டம் என்றத நான் ரொம்பவே தெரிஞ்சுகிட்டன். ஆனா ஒண்ணுங்க, பெரியளவு காசு இல்லைங்க எங்கட்ட ஆனா மனசு இருந்திச்சு. வீட்டில வசதி இல்லைங்க ஆனா சந்தோசம் நிறைஞ்சு இருந்திச்சு. அம்மா எங்கட வயித்த நிரப்ப சோத்துக்கு கஷ்டப்பட்டாங்க ஆனா எப்பவுமே சிரிக்க கஷ்டப்படலேங்க.

         

அவ்வளவு கஷ்டப்பட்டு நாங்க ஒருமாரி வளந்தமுங்க. நாங்க வளர்றதுக்கு துணையா இருந்தது எண்டால் ஒண்ணு எங்கட அம்மா, இன்னொண்ணு கடனுக்கும் அரிசி தர சம்மதிக்கும் முன்வீட்டு பலசரக்கு கடை மாமா. அந்த மாமா மட்டும் இல்லாட்டி நானெல்லாம் செத்தே போயிருபனுங்க. பள்ளிக்கூடத்தில எப்பவுமே நான் பின் வரிலதானுங்க இருப்பன். ஏன் தெரியுமா? அப்பதானே வாத்தியாருக்கு நான் தேஞ்சுபோன செருப்போட வந்திருக்கிறது தெரியாது. சப்பாத்து போட சொல்லி அடி அடியெண்டு அடிப்பாங்க பள்ளிக்கூடத்தில. அடிக்க தெரிஞ்சவங்களுக்கு எங்கள சரியா படிக்க தெரியலைங்க. எங்களுக்கும் சப்பாத்து போட ஆசை இல்லையா என்ன? காசு வேணுமே. ஒரு சப்பாத்து வாங்கினா நாங்க ஒருமாசம் பட்டினியா இருகோணுமுங்க. இப்ப நீங்களே சொல்லுங்க எனக்கு சோறு வேணுமா சப்பாத்து வேணுமா? இதெல்லாம் எங்க அந்த வாத்திக்கு புரிஞ்சுது. வகுப்பில நான் சோத்தப் பற்றி யோசிச்சுக்கொண்டு இருக்கேக்க அவங்க எல்லாரும் அவங்க அவங்கட சொத்தப்பற்றி கதைப்பாங்க. எனக்கு சிரிப்புதானுங்க வரும். ஒரு பிடி சோத்துக்கு படுற கஷ்டம், வீட்டு நாய்க்கு மட்டுமே பத்து பிடி சோறு வைக்கும் அவங்களுக்கு எல்லாம் எப்பிடிங்க விளங்கும்? ஒண்ணு தெரியுமா உங்களுக்கு இந்த 'fair & lovely' எண்டு மூஞ்சிக்கு பூசிக்கொள்ளுராங்களே அந்த பாணி, அத எனக்கு தொட்டுப்பார்க்க ரொம்ப ஆசைங்க அப்ப எல்லாம். எங்கட வகுப்பில படிக்கிறதுகள் பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டுவருவாங்க. பள்ளிக்கூடம் விட்டதும் அத பூசிக்கொண்டுதாங்க வீட்ட வெளிகிடுவாங்க. பள்ளிக்கூடம் முடிய மணி அடிச்சதும் நான் எண்ட செருப்ப தயார் படுத்திக்கொள்ளுவனுங்க. காரணம் அது கொஞ்சம் தேஞ்ச செருப்புங்க தப்பி தவறி போற வழில அறுந்திட்டா?? அசிங்கம்தானேங்க ரோட்ல. அவங்க அந்த பாணிய பூசிக்குவாங்க. ஒருக்கா எண்ட நண்பிக்கு தெரியாம எடுத்து பாப்பமா எண்டு தோனிச்சுதான் அப்புறம் அத செய்யலீங்க. அம்மாக்கு தெரிஞ்சா என்ன கொண்ணே போடுவா. அம்மா கஷ்டப்பட கத்துத் தந்தவ ஆசைப்பட கத்துத் தரலேங்க.

            

இப்பிடி எண்ட பள்ளிக்கூட வாழ்க்கைய மறக்க ஏலாதுங்க. அதுக்குள்ளே இந்த யுத்தம் வேற. நான் சந்தோசமா இருந்ததெல்லாம் எங்கட அந்த வீட்டுக்குள்ளதாங்க. வெளில இறங்கினா மற்றவங்கள பாக்க ரொம்ப பொறாமையா இருக்கும். பிறகென்ன நாம மட்டும் ஏன் இப்பிடி இருக்கம் எண்டு கவலை வந்திடும்.. செல் விழுற நேரம் எல்லாம் அது எண்ட தலையில விழாத எண்டு நிறைய தடவை ஜோசிச்சிருக்கனுங்க. கடவுள் காசு உள்ளவன் மேல எல்லாம் செல்ல போட்டு சாகடிக்கிறான். சாப்பாட்டுக்கே வழியில்லாத எங்கள எல்லாம் ஏனுங்க விட்டிவைக்கிறான் எண்டு எல்லாம் ஜோசிச்சு அழுதிருகிரனுங்க. என்ன பண்றது.. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விதமா வாழ்க்கைய கொடுத்திருக்காரு இந்த கடவுள். உண்மைய சொல்லுறேனுங்க கஷ்டப்பட்டு போய்டா நம்மட சமூகத்தில வாழுறது சரியான கஷ்டமுங்க. எங்கள எல்லாம் ரொம்ப அளவைகிறது எங்கட வறுமைகள் இல்லேங்க மற்றவங்கட வார்த்தைகள் தான். எப்பிடி எல்லாம் கதைப்பாங்க தெரியுமா உங்களுக்கு. அப்பப்பா.. நினைச்சு பாக்கவே பயங்கரமுங்க. அதிலையும் எங்கட கஷ்டத்த பயன்படுத்தி சில ஆம்பிள மிருகங்கள் எங்கட உடம்பிலையும் ஆசைபடுவாங்க. ஏனுங்க பொம்பிள எண்டா அவங்களுக்கு எல்லாம் உடல் சுகம் கொடுக்கிற ஒண்ணாதான் முதல் ஞாபகம் வருமா. என்ன எங்கட அம்மா கொஞ்சம் அழகா பெத்ததும் தப்புதானுங்க. எங்கட கஷ்டமும் வீட்டில எல்லாம் பொம்பிளைகள் எண்டதாலையும் எங்கட கஷ்டத்தில இருந்து எங்கள காப்பாத்திக் கொள்ளுறதவிட இப்படிப்பட்ட ஆண்களிடத்தில இருந்து எங்கட உடலையும் கற்பையும் காப்பாத்திக் கொள்ளுரதானுங்க மிகப்பெரிய சவாலாக இருந்திச்சு. கிண்டல் என்ற பேர்ல எங்கட உடம்பையும் கற்பையும் விமர்சிக்கிற இந்த ஒருசில கொடூர ஆண்கள என்னதான் செய்றதுங்க.

          

இப்பிடியான ஒரு கசப்பான அனுபவத்த சொல்லுறன் கேளுங்க...  தொடரும்..

        

எது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை?

Posted on May 30, 2011 at 4:14 AM Comments comments (2)

 

      

அண்மையில் எனது கைகளில் சிக்கியது பிரபல உளவியல் சார் ஆராட்சிகளுக்கும் உளவியல் நூல்களுக்கும் பெயர் போன கிளான் ஒ கப்பார்ட் எழுதிய "With the eyes of the mind " என்கின்ற ஒரு அழகிய ஆங்கில உளவியல் நூல். சுவாரஷ்யம் நிறைந்த தகவல்கள் மூளையை கசக்கி பிழிந்து என் சிந்தனையை தூண்டின. அவற்றிலிருந்து ஆங்காங்கே பொறுக்கி எடுத்ததில் கிடைத்த சில விடயங்களை நண்பர்களுக்காக இங்கே தருகின்றேன். இவற்றுக்குள் அதிகமான கருத்துக்கள் இந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டாலும் இன்னும் பல விடயங்கள் இதர உளவியல் நூல்கள் மற்றும் எனது "வேர்களும் பூக்கட்டும்" என்கின்ற உளவியல் நூலிலிருந்தும் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.

 

எது அழகிய சந்தோசமான திருமண வாழ்க்கை? இதை பற்றி அதிகம் பேச விளையவில்லை காரணம் இது ஒரு மிகப்பெரிய விடயம். எனக்குமா அதில் இன்னும் அனுபவம் இல்லை. இருந்தும் இதற்கு கணவனும் மனைவியும் குறைந்த பட்சம் என்ன என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மட்டும் எளிமையாக கூறலாம் என நினைக்கிறேன். பின்வரும் காரியங்கள் அழகிய சந்தோசமான நீண்ட திருமண வாழ்கையை அல்லது நிரந்தர காதல் வாழ்கையை கொடுக்கவல்லன.

   

          

 

  1. ஒருபோதும் எதையும் அனுமானம் செய்யாதீர்கள்.
  2. விமர்சனம் செய்வதைக்காட்டிலும் அதிகம் பாராட்டுங்கள்.
  3. எப்பொழுதும் உங்கள் நண்பர்களிடத்தில் உங்கள் கணவன் மனைவியைப் பற்றி பேசும் பொழுது அவர்களுடைய ஆகக்குறைந்த 3 நல்ல விடயங்களையாவது கூறுங்கள்.
  4. ஒரு வழமையான விடயத்தை இன்னும் பல முறைகளில் செய்யலாம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (உதாரணமாக ஒரு உருளைக்கிழங்கை வெட்டுவதற்கு ஒன்றிற்கு மேலான மாற்று வழிகள் உண்டு)
  5. உங்கள் நேர அட்டவணையில் ஒவ்வொருநாளும் உங்கள் இருவருக்கும் என ஒரு நிரந்தரமான நேரத்தை ஒதுக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்.
  6. உங்களில் ஒருவர் பேசும்போழுதோ அல்லது பொதுவாகவோ நீங்கள் பேசுவதை விட மற்றவருக்கு செவி மடுப்பதில் அதிகம் அக்கறை செலுத்துங்கள்.
  7. ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், திருமணம் என்பது சிலவேளைகளில் கட்டிலில் கிடக்கும் ரோஜா போன்று சுவாரஷ்யம் ஆனது. சிலவேளைகளில் முட்கள் போன்று குத்தக்கூடியது.
  8. வீட்டிலுள்ள சகல விடயங்களிலும் நீங்கள் இருவரும் பங்கெடுத்துக்கொள்ளுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே சகல விடயங்களையும் பங்கிட்டுக்கொள்ளுங்கள்.
  9. ஒருபோதும் கோவத்துடன் படுக்கைக்குச் செல்லாதீர்கள்.
  10. எப்பொழுதும் விவாதத்திற்கு செல்லுமுன் உங்கள் வாதம் தேவையானதும் பெறுமதியானதும் பிரயோசனம் மிக்கதுமானதா என கவனித்துக்கொள்ளுங்கள்.
  11. சிலவேளைகளில் மற்றவரின் ஏற்றுக்கொள்ளாமையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  12. ஒரு போதும், எச்சந்தர்ப்பத்திலும் "D" இல் ஆரம்பிக்கும் சொல்லை மட்டும் உச்சரித்துவிடாதீர்கள். (Divorse )
  13. பல வாக்குவாதங்களில் நீங்கள்தான் 'சரி' என்று வாதிட நினைக்கிறீர்களா அல்லது உங்கள் குடும்பம் வேண்டும் என்று நினைக்கிறீர்களா?மற்றவருடைய அந்தரங்கங்களை மதியுங்கள்.
  14. காதல் ஒரு சிறுபிள்ளை பராயத்தைப்போன்றது என்பதை மறந்துவிடாதீர்கள். அதை சரியாக பகிர்ந்துகொள்ள அதிகம் அதை படிக்கவேண்டி இருக்கும்.
  15. ஆகக்குறைந்தது ஒரு நாளைக்கு ஒருநேரமாவது (பெரும்பாலும் இரவில்) ஒன்றாக இருந்து உணவருந்துங்கள்.
  16. "I LOVE YOU" என்னும் வார்த்தையை சொல்ல கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஒருபோதும் தவற விடாதீர்கள்.
  17. எப்பொழுதும் வெளியில் செல்லும்பொழுது (சந்தர்ப்பத்தைப் பொறுத்தது) உங்கள் கணவரின் மனைவியின் கைகளை பற்றிக்கொள்ள முயற்சியுங்கள்.
  18. ஒவ்வொருநாளும் ஒருவரை ஒருவர் ஆகக்குறைந்தது ஒருமுறையாவது கட்டி அணைத்துக்கொள்ளவோ முத்தமிடவோ மறக்காதீர்கள்.
  19. எதையும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட கிடைத்தது மிக நல்லம் என நம்புங்கள்.
  20. எப்பொழுதும் வேகமாக "I am Sorry" என்ற வார்த்தையை சொல்ல முயற்சியுங்கள்.
  21. எப்பொழுதும் நீங்கள் விரும்புபவரை தெரிவுசெய்யுங்கள் அல்லது தெரிவு செய்தவரை முழுமையாக விரும்புங்கள்.
  22. காதல் என்பது எப்பொழுதுமே ஒரு உணர்வு மட்டும் அல்ல மாறாக அது உங்கள் வாழ்க்கை சம்மந்தமான ஒரு முடிவும் கூட. முடிவு எடுத்தபின் அதை அனுபவித்தே ஆகவேண்டும்.
  23. சிறு சிறு ஊடல் விளையாட்டுகளிலும் சிறு சிறு கேலிச் சண்டைகளிலும் ஆர்வம் செலுத்துங்கள். கட்டில் ஊடல் சண்டைகளின் பொது கணவனும் மனைவியும் ஆடைகளின்றி சண்டை போடுதல் மிக மிக ஊடலை வலுக்கொள்ள செய்து கணவனில் மனைவியில் அதிகம் ஆர்வத்தை உருவாக்கும் என்கிறது ஒரு உளவியல் நூல். (சத்தியமா எனக்கு தெரியாது, நான் தப்பா ஒன்றும் சொல்லவில்லையே???)
  24. இருவருக்கும் இடையில் எந்த ரகசியங்களையும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
  25. சரியோ தவறோ எப்பொழுதும் உங்கள் கணவன் மனைவி பக்கமே சார்ந்திருங்கள்.
  26. இருவரும் போதுமான அளவு பேசிக்கொள்ளுதல், உரையாடுதல் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது.
  27. எப்பொழுதும் மற்றவரை மதியுங்கள். அவர்கள் விருப்பு வெறுப்புக்களுக்கு மதிப்பளியுங்கள்.
  28. ஒருபோதும் உங்கள் கணவனையோ மனைவியையோ எச்சந்தர்பத்திலும் மட்டம் தட்ட எத்தனிக்காதீர்கள். குறைத்து மதிப்பிடாதீர்கள்.
  29. சிறிய விடயமாக இருந்தாலும் உங்களுக்குள்ளே பேசி முடிவுகளை எடுக்க முயற்சியுங்கள்.
  30. உங்கள் சண்டைகளில் அல்லது கருத்து வேறுபாடுகள் என்று வரும்பொழுது ஒருபோதும் 'எப்பொழுதும்' (always), 'ஒருபோதும்' (Never) என்கின்ற சொற்பிரயோகங்களை பாவிக்காதீர்கள்.
  31. வாதிடுதல் தேவையானதுதான் ஆனால் ஒருபோதும் அத்தருணங்களில் உங்கள் கோபத்தை வெளிப்படுத்த சபித்தல், சாபம் இடுதல் தொடர்பான வார்த்தைகளை பிரயோகிக்காதீர்கள்.
  32. உங்கள் கணவனையோ மனைவியையோ வேறு யாருடனும் ஒப்பிட்டு பேசாதீர்கள். உங்கள் திருமணத்தையும் கூட.
  33. கணவன் மனைவி சார்ந்த சிறு சிறு விடயங்களையும் ஊக்குவியுங்கள், பாராட்டுங்கள்.
  34. கணவன் மனைவியின் விருப்பங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ளுவது போல அவர்கள் வெறுப்புக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  35. நீங்கள் அதிகம் பேசுவதை விட மற்றவர் பேசுவதை கவனமாக செவிமடுத்தல் நல்லதொரு தொடர்பாடலையும் நம்பிக்கைத் தன்மையையும் ஏற்படுத்தும்.
  36. கணவன் மனைவி ஆடைத்தெரிவுகளில் நீங்களும் கணிசமான ஈடுபாட்டை காட்டுங்கள்.
  37. கணவன் மனைவி சார்ந்த குடும்பங்களை பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை இழிவாக பேசாதீர்கள்.
  38. கணவனும் மனைவியும் குடும்பம் என்கின்ற அமைப்பில் சமமானவர்கள் என்பதை மறக்காதீர்கள்.
  39. கணவன் மனைவி சார்ந்த நல்ல விடயங்களை எப்பொழுதும் ஞாபகம் வைத்திருக்க முயற்சியுங்கள். கெட்ட விடயங்களை மறக்க முயட்சியாது செய்தல் நன்று.
  40. கணவன் மனைவியை மனைவி கணவனை சிரிக்க வைப்பதற்கு என்ன யுக்தியை கையாள வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.
  41. மற்றவரின் குறைபாடுகளை எச்சந்தர்பத்திலும் கூற எத்தனிக்காதீர்கள்.
  42. காரியாலைய நினைவுகளையும் கடமைகளையும் வீட்டிற்குள்ளோ அல்லது கட்டிலறைகுள்ளோ கொண்டு செல்லாதீர்கள்.
  43. எல்லாவற்றிலும் உங்கள் முன்னுரிமை உங்கள் கணவன் அல்லது மனைவியாகவே இருக்கட்டும்.

  

         

சொப்பன நேரம்

Posted on May 26, 2011 at 1:59 AM Comments comments (0)

      

நீயும் நானும்...

உன்னை பார்த்தபோது,

அரை வயதாகிய

எனது உடலும்

முழு வயதாகிய

எனது வாழ்கையும்

இப்பதான் பிறந்ததாய்

பிரமிப்பு..

அழகாய் பார்த்திருந்தாலும்

அழகிய அழகை

இப்பதான் பார்க்கிறேன்.

சூம்பிப்போன - என்

உணர்வுகளுக்கு

உரமிட்டு

உசுப்பேத்திய நிமிடங்கள்

அவை....

வேகம் தணிந்து

விவேகம் கெட்டு

வற்றும் நிலை வந்தும்

தடுமாறி ஓடும்

ரத்தம் கூட

பரபரத்த நொடிகள்...

பிறந்தது முதல்

இல்லை என்றே

பேசிக்கொண்ட ரசனை

சிலிர்த்து உருவெடுத்து

சிரித்த நேரம்...

வலப்பக்க விழியும்

இடப்பக்க விழியும்

பார்த்த காட்சியை

நம்பமறுத்த தடுமாற்றம்...

அது அவளின் முகம்

இவ்வளவு அழகு - அந்த

ஒருமை முகத்தில்

பன்மை அழகு..

தடுமாற்றம் ஒருபுறம்

தடமாற்றம் இன்னொருபுறம்

பார்க்க பார்க்க மயக்கம்,

விட்டு விலகவோ தயக்கம்.

நான் பார்த்த சித்திரங்களில்

ரோஜாவையும் சரோஜாவையும் விட

இவளுக்கே முதலிடம்...

அவள் பேசிய போது....

சிலைக்குள் பேச்சையும்,

மலருக்குள் பாஷையையும்,

நிலவுக்குள் வார்த்தைகளையும்

இங்குதான் பார்த்தேன்...

அவள் பேசும்போது

ஒட்டிப்பிரிந்த சொப்பன உதடுகள்

சூம்பிப்போன - என்

இதய கூட்டிற்குள்

ஒய்யாரமாய் போய் அமர்ந்தன.

அழகிய வார்த்தைகள் - எனக்கோ

மது அருந்தா மயக்கம்.

பேசுகிறாள் - நான்

கேட்கிறேன்.

கடைசிவரை புரியவேயில்லை..

அவள் பேசும் போது

கேட்டதைவிட - அவளை

பார்த்ததுதான் அதிகம்.

என்னை

மயக்கமாக்கி

மந்திரம் சொன்னகதை

அது.

பேசி பேசி

அழகியசுந்தரி

பெருமை சேர்த்து சென்றாள்

மொழிக்கு..

நானோ

அரவம் தீண்டியவன் போல்

ஆரவாரம் இன்றியே

மருந்திட்டுக்கொண்டேன் வலிக்கு.

காதல் சொன்ன போது...

மாதக்கணக்கில்

ஏக்கம்,

மறந்துபோனது - என்

தூக்கம்,

வருடக்கணக்கில்

சேர்த்துவைத்த காயங்கள்

கணக்கிட மறந்த வலிகள்..

இறுதியில்

ஒரே வார்த்தையில்

மருந்திட்டுப்போனாள்

என்

மர்ம ஏவாள்.

மன அறையில்

அறைந்த ஆணியில்

ஏற்றப்பட்ட அவளுருவம்

மறந்தேபோனது - காதலால்

எரிக்கப்பட்ட இவனுருவம்..

சுற்றும் பூமி நின்றுபோக

உச்ச நிலா உரசிபேச

அலையில் மிதந்து

கரையில் கரையும்

கடல் நுரையாய்

உறைந்தேபோனேன்..

வானத்தில் பறந்தேன்,

மேகத்தையும் பார்த்தேன்,

உச்ச வெயிலிலும்

ஒய்யாரமாய் நனைந்தேன்,

ஓடி வரும் நதிக்கும்,

ஒட்ட நிற்கும் - இந்த

கடலுக்கும்

டும் டும் டும் எப்போ..

கொண்டாட்டம் தான் அப்போ....

கடுப்பேத்துகிறாள் ஐயா இந்த பொண்ணு..

Posted on May 24, 2011 at 3:10 AM Comments comments (2)

ஆண்களை விட பெண்களுக்குத்தான் வாழ்க்கை பற்றிய கனவுகள் அதிகம் இருப்பதுண்டு. இது மனவியல் சார்ந்த ஒரு இயல்பு என்று கூட சொல்கிறார்கள் உளவியலாளர்கள். இந்த கனவுகள் குடும்ப வாழ்கையில் அதிகமான இன்ப துன்ப நிலைமைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. பெண்களின் சில கனவுகள் யதார்த்தமானவை. குடும்பத்திற்கு சந்தோசத்தை கொடுக்கக்கூடியன. இன்னும் சில கனவுகள் கொஞ்சம் யதார்த்தமானவை. இவ்வாறான கனவுகள், கணவன் மனைவி இவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் சந்தோசமும் தற்செயலாக துன்பமும் வெளிப்படுகின்றன. மூன்றாவது வகை முழுமையாக யதார்த்தத்திற்கு முரணான கனவுகள். சிலவேளைகளில் இவை முரட்டுத்தனமான கனவுகளாக கூட இருந்து விடுகின்றன. இவ்வாறான கனவுகள் தான் குடும்ப சந்தோசத்தில் அதிகமாக கும்மியடிக்கின்றன.

            

நம்ம ஆண்கள் இருக்காங்களே, சில நேரங்களில ரொம்ப சமத்தா இருந்திடுறாங்க. பல நேரங்களில சொதப்பிடுறாங்க. என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லுறார், ஆம்பிளைங்க பொம்பிளைங்கள சரியா புரிஞ்சுகொண்டாலே எல்லாம் சரியாகிடும் எண்டு. எங்க புரிஞ்சுகொள்றது?? நாம ஒண்ணு நினைச்சா அவங்க வேறொண்டு சொல்றாங்க என்கிறார் பக்கத்தில இருந்த புது மாப்பிள்ளை நண்பர். சரி, என்னதான் நடக்குது இந்த கனவுகள் ஆசைகளுக்கும் அவற்றை நடைமுறைப்படுத்தும்பொளுதும் எண்டு ஜோசிக்கிற போது எனக்கு தோணிச்சு என்கிட்ட இருக்கிற "The true love" என்கிற புத்தகத்தை ஒருக்கா எடுத்து புரட்டி பார்ப்போமா எண்டு. அதையும் வாசிச்சு பார்த்ததில சில வசனங்கள் என் கண்ணா துறந்திச்சு பாருங்க..

                   

கனவு என்பது ஆசைகளின் வெளிப்பாடு என்ற ஓசோட கருத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பல ஆசைகள் நிறைவேறாமல் போகிற போது அல்லது நிறைவேற காலம் எடுக்கிற போது கனவு உருவாகிறது. ஆக ஆசைக்கும் கனவுக்கும் இலட்சியம் ஒன்றுதான். பெண்களுக்கு அதிகம் பிடிச்ச விடயங்கள் தன் கணவனிடத்தில் அல்லது காதலனிடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது பெண்கள் தங்களை கவர்ந்த விடயங்கள் தங்கள் ஆணிடம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது சாத்தியம் என்றால் எதிர்பார்ப்பு வளர ஆரம்பிச்சுவிடுகிறது. பெண்களின் இந்த ஆசை, பின்னர் கனவு, இறுதியில் எதிர்பார்ப்பு இந்த மூன்றுமே அநேக ஆண்களுக்கு ஆப்பாகதத்தான் அமைந்துவிடுகிறது. ஒரு விடயம் தங்களுக்கு சந்தோசத்தை தரும் என்று பெண்கள் நினைத்துவிட்டால் அதை கணவனிடத்தில் எதிர்பார்ப்பது யதார்த்தமானது. ஆனால், அது அந்த ஆணினால் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்த முடியும் என்பதை சிந்திக்க அதிகமான பெண்கள் மறந்துவிடுகிறார்கள். எதற்கும் மண்டையை ஆட்டும் ஜாதி இந்த ஆண் காதல் ஜாதி. (கொஞ்சம் ஓவரா இருக்கோ..) கொஞ்சம் கூட ஜோசிக்காமல் நம்ம ஆண்களும் "ஆமா செய்றன், உனக்கு இல்லாததா" எண்டு அறிக்கை விட்டுடுவினம். பின்னர் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் பொழுது கோட்டை விட்டுடுவினம். இங்கதான் நம்ம பொண்ணுங்க ரொம்ப உசார். "சொன்னால் செய்யனும்" என்ற வரிகளை அனல் பறக்க, மூச்சுத்தெறிக்க உச்சரிப்பினம். அவர்கள் கடுப்பிலும் நியாயம் இருக்குத்தானே பாருங்கோ. ரஜினி மாதிரி செய்றதைத்தான் சொல்லுவன், சொல்லுறததான் செய்வன் எண்டு பஞ்சு டயலாக் பேசுறது நடைமுறை வாழ்க்கைக்கு சரிவருமுங்களா? ஆண்களும் கொஞ்சம் ஜோசிக்கணுமுங்க.. பெண்கள் மிருதுவானவர்கள் தானே.. (பாராட்டுக்கு நன்றி..)

              

ஒன்று செய்ய முடிஞ்சால் செய்யணும். இல்லையெண்டால் பெண்ணின் கனவு ஆசையாகும் போதே முடியாது எண்டு சொல்லிடனும். (ஆமா முடியாது எண்ணு சொல்லிடாமட்டும் விடவா போறாளுகள்.. எண்டு ஆண்கள் முணுமுணுக்கிறது புரியுது சார்...) இவ்வாறான நேர் பேச்சு அல்லது straight forward reaction குடும்பத்தில அல்லது காதலர்களுக்கு மத்தியில அதிகமான ஏமாற்றங்களையும் நீண்ட கால விரிசல்களையும் தடுக்கும் என்கிறது அந்த புத்தகம். உண்மைதானே?? ஆசை என்பது சிலவேளைகளில் கற்பனை மட்டும் கலந்த ஒரு தேடலாக கூட இருக்கலாம் இல்லையா. இவ்வாறான ஆசைகள் நிச்சயமாக பிணக்குகளைதான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இந்த ஆசைகள் மட்டில் பெண்கள் மிக கவனமாக இருத்தல் அவசியம். தேவையானவற்றுக்கு மட்டும் எதிர்பார்ப்புக்களை வளர்த்தல் ஆண்களை கொஞ்சம் நின்மதியாக மூச்சுவிட அனுமதிக்கும். ஆண்களும் பெண்கள் குறைந்த பட்சம் ஆசைப்படும் சிறு சிறு விடயங்களில் நம்பிக்கை தன்மையை வளர்த்தல் உறவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதிகமான ஆசைகளை தங்கள் கணவனிடத்திலோ அல்லது காதலனிடத்திலோ திணிப்பது உறவு ஆரோக்கியமின்மையை தோற்றுவிக்கும் முதல் காரணி. அதையும் தாண்டி நம்மல்ல சில விறைச்ச அண்ணன்மார் இருக்கத்தான் செய்யுறாங்க. பொம்பிளைங்க எத ஜோசித்தாலும் அசைபட்டாலும் கடைசிவரை இவங்க கண்டே பிடிச்சுக்க மாட்டாங்க. சுத்த வேஸ்டுங்க. முக்கியமான விஷயம், தாங்கள் நினைப்பதை ஆண்கள் சரியாக புருஞ்சுகணும் எண்டு பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பாங்க. சிலநேரம் நாம சாத்திர காரனாவும் இருக்கோணுமுங்க. இது உண்மையான விடயம்.

                    

சரி அத விடுங்க. எண்ட நண்பர் ஒருத்தர் கேக்கிறார், பொண்ணுங்க எத ஆக குறைஞ்ச பட்சம் எதிர்பாகிறாங்க நம்மட்ட?? இது நாம் இருக்கிற நிலையை பொறுத்தது. அடிப்படையில் அவர்களுடன் கணவனோ காதலனோ அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுடன் உணர்வு பூர்வமாக நடந்துகொண்டாலே அவர்களின் அரைவாசி எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற போதுமானதாக முடியும்.. என்னங்க நான் சொல்லுறது சரிதானே.. எதாச்சும் சொல்லுங்களேன்.. இரண்டாவது பெண்கள் அதிகம் தங்கள் துணையுடன் பேசவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மனம் விட்டு பேசுறீங்களோ இல்லையோ வாய் விட்டு பேசினாலே அரைவாசி பிரச்சனை முடிஞ்சுடும்க. ஒண்ணு தெரியுமா, பெண்கள் ரொம்ப கூர்மையானவர்கள் (and sensitive). ஆண்கள் பொய் பேசும் பொழுது அவர்கள் 80% புரிந்துகொள்கிறார்கள் ஐயா டூப்புதான் விடுறார் எண்டு. இதை ஒரு ஆராச்சியும் சொல்லியிருக்குங்க. ஆண்கள் சொல்லும் பொய்களை பெண்கள் இலகுவாக கண்டுகொள்கிறார்கள் என்று. இதுதான் நம்மள்ள அதிகம் பேர் அவங்கட்ட பொய் சொல்லி முடியிரதுக்குள்ளவே மாட்டிக்கிறது.. பெண்களுக்கு தங்கள் ஆண்கள் நேர்மையாக இருக்க வேண்டும் அத்தோடு சகல விடயங்களையும் (100%) வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை கொண்டவர்கள். ஆக இந்த சிறிய அடிப்படை விசயங்களில ஆண்கள் சரியாக இருந்தாலே போதும், அவங்க அவங்க பெண்களின் கனவையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயமாக வெற்றிகொள்ளலாம்.

                  

கவிஞர் அஷ்ரப் ஐயா சொல்லுவதபோல, வாசிசுபோட்டு சும்மா போகாதேங்கோ, ஒரு கருத்தையாவது பதிவு செய்திட்டு போங்க...

                  

இன்னுமொரு தலைப்போடு தொடர்வேன் சீக்கிரத்தில்.

                 

இந்த அன்னையையும் கொஞ்சம் பாருங்கோ...

Posted on May 9, 2011 at 2:24 AM Comments comments (0)

அன்னையர் தினம்.. காலம் காலாமாய் அன்னையர்களை நினைவுகூரும் இந்த அன்னையர் தினத்தில் நாம் அனைவரும் நமது அன்னையர்களை அன்போடு நினைவுகூர்ந்து மகிழ்கின்றோம். நல்ல விடயம். காலங்கள் கடந்து போக போக மனித வாழ்வியல் முறைமைகளும் மாற்றங்களை எதிர்கொண்டே செல்லவேண்டியிருக்கிறது. அதுவும் நூற்றாண்டுகளை கடந்து இன்று புதிய நூற்றாண்டில் வாழும் நமக்கு பல புதிய புதிய சிந்தனைகளும் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களும் எமது வாழ்வை ஒரு கை பார்க்கத்தான் செய்கின்றன. காலத்திற்கு ஏற்றாற்போல் வாழப்பளகிறவன் வாழ்கையை வெற்றி கொள்கிறான். முடியாதவன் வாழ்கையில் தோற்றுப்போகிறான். விடயத்துக்கு வருகிறேன்.

                

கடந்த வாரம் எனது வழமையான நிகழ்ச்சி நிரலின்படி ஒரு முதியோர் இல்லத்திற்கு செல்ல வாய்ப்புக்கிடைத்தது எனது நண்பருடன். ஒரு சிறு அனுபவம் என் நெஞ்சை உருக்கியது. அதை அன்னையர் தினத்தை கோடிட்டு உங்களுக்கும் சொல்வதில் அதிகம் பிரியம். பல அன்னையர்களை அங்கு சந்தித்தேன். அதில் என்னை மிகவும் நெகிழ வைத்தவள் ஒரு தாய். இவர் வடக்கை சேர்ந்தவள். கணவன் இறந்து எட்டு வருடங்கள். மூன்று ஆண் பிள்ளைகள். இருவர் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருவர் இலங்கையில் இருப்பதாக அந்த தாய் கூறுகிறார். அனால் அவர் இப்பொழுது எங்கு இருக்கின்றார் என்பது தெரியாது.

            

இவரும் இவர் கணவரும் முதியோர் இல்லத்திற்கு வந்து இன்று 9 வருடங்கள் முடிகிறது. இவர் கணவர் இறுதிச்சடங்கை கூட இந்த முதியோர் இல்லமும் சக முதியோர்களும் தான் செய்து முடித்தார்கள். பிள்ளைகள் இவர்களை மறந்துபோனார்கள் ஆனால் இன்னும் அவர்கள் புகைப்படங்களை பத்திரமாக வைத்திருக்கிறார் இந்த தாய். இவரது பிள்ளைகள் மீதான அக்கறை தியாகம் கரிசனை சகலதும் இப்பொழுது வீணாய் போய்விட்டதாய் புலம்புகிறாள். கூலி வேலைக்கு போய் தான் சாப்பிடாமல் தனது பிள்ளைகளுக்கு இறைச்சிக் கொத்து ரொட்டி வாங்கிக்கொடுத்ததையும் அவர்கள் அந்த அம்மா இப்பொழுது உயிரோடு இருக்கின்றாளா என்று கூட கவலை படமால் தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளுடன் சொகுசு வாழ்க்கை வாழ்வதையும் நினைத்து அழுதுகொண்டாள். பிள்ளைகளை பெற்றபொழுது அவள் கொண்ட வலிகளுக்கும், அவர்களை ஆளாக்குவதில் அவள் பட்ட துன்பங்களுக்கும் பயன் இல்லாமல் போய்விட்டதாய் புலம்புகிறாள். "இவர்களை பெறாமல் நான் மலடியாய் இருந்திருக்கலாம் தம்பி." என்னை அதிகம் யோசிக்கவைத்த அவரின் கடைசி வரிகள் இவை.

      

அன்னையை பற்றி எவ்வளவோ சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம் எமது சிறு வயது முதல். ஏன் அதை அனுபவித்தும் இருக்கிறோம். அப்படியிருந்தும் இன்னும் சிலருக்கு இந்த அன்னையின் தாற்பரியம் ஏன் புரியாமல் இருக்கிறது? தாயை கண்டுகொள்ளாத பிள்ளைகள் எப்படி தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தாயாக தந்தையாக இருக்க முடிகிறது? தாயை மறந்து கடவுளுக்கு விரதமிருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்? தாயை மதிக்காமல் கோவிலுக்கு போகும் பக்தர்கள் எப்படிப்பட்டவர்கள்? இதெல்லாம் சொல்லிகொடுத்துதான் கற்றுக்கொள்ள வேண்டுமா?? தாயை மதிக்காதவனின் சாபக்கேடு அவன் தலையிலேயே குடிகொண்டு விடுகிறது. எங்கு போனாலும் அதற்குரிய தண்டனையை அவன் அனுபவித்தேயாகவேண்டும்.

         

இப்படிப்பட்டவர்கள் வருடத்தில் ஒருமுறை இந்த அன்னையர் தினத்திலாவது தங்கள் அன்னையைப் பற்றி ஜோசிக்கவேண்டாமா?. இம்முறை அன்னையர் தினத்தில் எனது வேண்டுதல்கள் எல்லாம் எனது அன்னைக்காக அல்ல. இப்படிப்பட்ட மிருகத்தனமுள்ள மனிதர்களுக்காகதான். இவர்கள் கொஞ்சமாவது மாறி தங்கள் பெற்றோர்களை கண்டுகொள்ள கடவுள் இவர்களுக்கு ஆசீர் வழங்கட்டும். நமது அன்னையர் நலமாக இருக்கிறார்கள். நிறைய அன்னையர் நலம் கெட்டு எவராலும் கவனித்துக்கொள்ளப் படாமல் இருக்கின்றனர். அவர்களுக்காக கடவுளிடம் வேண்டுவோம். அப்பொழுது நமது அன்னையர் இன்னும் சுகம் பெறுவர்.

      

 

  தாய் முதியோர் இல்லத்தில் ...............          

மகன் புதியவள் இல்லத்தில் .....

         

இரவின் மடியில்

Posted on May 4, 2011 at 1:54 AM Comments comments (0)

இருட்டுப்போர்வையில்

சின்ன ஓட்டை

திருட்டுப்பார்வையில் - அந்த

வண்ண நிலா..

    

வாய் பிளந்த வானம்

வருடிப்போகும் மேகம்

ஏன் இந்த வேகம்

வானோடு இல்லையா மோகம்?

       

மேலே கறுப்பாய் வானம்

கீழே வெறுப்பாய் நான்

போர்த்திய முன்னிருட்டில்

சாத்தியபடி என் மனசு..

        

சிரிப்பதற்கு மனமில்லை

மரிப்பதற்கும் விதியில்லை

என்னிலை புரிந்ததோ என்னவோ

மூச்சுக்காற்றிலும் சூடில்லை.

      

விண்மீன்கள் பல் இழிக்க

விண் நிலவும் பகல் தெழிக்க

முன்னிரவு விடிந்து விழிக்க

என்னிரவு முடிந்துபோகிறது

வெறுமையாய்...

     

நிலவே நீ

சுட்டவில்லை.

உன் பகலிலும்

சுத்தமில்லை.

அசை ஆசையாய் பார்க்கும்வரை - உன்

அழகில்கூட ஒரு

அர்த்தமில்லை.

       

என் தனிமைக்கு நீ காவல். - எனக்கோ

இருட்டில் காதல்.

முட்டி போகும் காற்றுக்கெல்லாம்

முடிந்துபோகும் - என்

கற்பனையோடு மோதல்.

       

ஒற்றை இரவு

இரட்டை நிலா

ஒன்று நீ - வானில்

மற்றொன்று அவள் - மனதில்.

   


Rss_feed

எனது பிரசவங்கள்.

                                                    

The motivational book.

Recent Videos

98 views - 0 comments
107 views - 1 comment
97 views - 0 comments

Upcoming Events

Tuesday, May 29 All Day
Thursday, Jun 14 All Day
Thursday, Jun 14 All Day
Thursday, Jun 21 All Day

Featured Products

No featured products